Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

EVM-VVPAT case: இவிஎம்-விவிபிஏடி வழக்கு: தேர்தல் ஆணையத்தின் வளக்கத்தையடுத்து தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

PRITHIVIRAJ24-04-2024
EVM-VVPAT case: இவிஎம்-விவிபிஏடி வழக்கு: தேர்தல் ஆணையத்தின் வளக்கத்தையடுத்து தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

மின்னணு வாக்கு எந்திரத்தின் 3 பகுதிகளான வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டுக் கருவி, வாக்கு ஒப்புகை தணிக்கைச் சீட்டு ஆகியவற்றுக்கு தனித்தனியாக கட்டுப்பாட்டுக் கருவிகள் உள்ளன, அனைத்தும் ஒருமுறை புரோகிராம் செய்யப்பட்டவை என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின்போது பதிவான வாக்குகளை எண்ணும்போது, மின்னணு வாக்கு எந்திரத்தில்(EVM) பதிவான வாக்குகளையும், விவிபாட்(VVPAT) எனப்படும் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை உறுதி செய்யும் சீட்டு வழங்கும் எந்திரத்தின் கணக்கையும் சரிபார்க்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

election-commission-of-india (1).jpg

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா அமர்வில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரர்கள், தேர்தல் ஆணைய வழக்கறிஞர்கள், ஆகியோர் முன், வாக்காளர் வாக்களித்தபின்ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கும் எந்திரத்தின் மீது சந்தேகம் இருப்பதாகவும், 5 கேள்விகளுக்கு விளக்கம் தேவை என்று தெரிவித்தனர்

  1. நுன்கட்டுப்பாட்டுக் கருவி கன்ட்ரோல் யூனிட்டில் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது வாக்காளர் வாக்களித்தபின் ஒப்புகைசீட்டு வழங்கும் விவிபேட் எந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளதா.
  2. நுன்கட்டுப்பாட்டுக் கருவி ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?
  3. கட்சிகளுக்கான சின்னங்களை பதிவேற்றும் யூனிட்கள் உள்ளன.
  4. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேமிப்பதற்கான வரம்பு காலம் 30 நாட்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் தேர்தல் தொடர்பான மனுக்கள் அல்லது மறுவாக்கு எண்ணிக்கை வாய்ப்புகள் இருந்தால் இவிஎம் எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளதா. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 81ன் கீழ் இவிஎம் எந்திரத்தின் பாதுகாப்பு காலம் 45 நாட்கள் என்று கூறுகிறது. உங்கள் அதிகாரியிடம் இருந்து விளக்கம் பெற வேண்டும்.
  5.  இவிஎம் எந்திரத்தில் 3 பகுதிகள் உள்ளன. பாலட் யூனிட்(வாக்குப்பதிவு), கன்ட்ரோல் யூனிட்(கட்டுப்பாட்டுகருவி), விவிபேட்(வாக்காளர் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம்) இந்த 3 கருவிகளும் ஒரே இடத்தில் ஒன்றாகச் சேமிக்கப்பட்டு, சீல்வைக்கப்பட்டுள்ளதா.
    

இந்த கேள்விகளுக்கு எங்களுக்கு விளக்கம் தேவைப்படுகிறது. ஆதலால், உங்கள் அதிகாரிகளை பிற்பகல் 2 மணிக்கு நேரில் ஆஜராக உத்தரவிடுகிறோம்” என உத்தரவிட்டனர்.

evm1-bccl.jpg

இதன்படி தேர்தல் ஆணையத்தின் சார்பில் அதிகாரி பிற்பகலில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வு முன் ஆஜராகினார். அவர் அளித்த விளக்கத்தில் “ மின்னணு வாக்கு எந்திரத்தின் 3 பகுதிகளான வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டுக் கருவி, வாக்கு ஒப்புகை தணிக்கைச் சீட்டு ஆகியவற்றுக்கு தனித்தனியாக கட்டுப்பாட்டுக் கருவிகள் உள்ளன, அனைத்தும் ஒருமுறை புரோகிராம் செய்யப்பட்டவை.

வாக்கு ஒப்புகை தணிக்கைச் சீட்டு எந்திரம் தேர்தல் முடிந்து 45 நாட்கள்வரை பாதுகாப்பாக வைக்கப்படும், அதில் இருக்கும் விவரங்கள் அழிக்கப்படாது.

அந்த 45 நாட்கள் முடிந்தபின், தேர்தல் அதிகாரி, பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கும் கடிதம் எழுதி, தேர்தல் தொடர்பான ஏதேனும் மனுக்கள் நிலுவையில் இருக்கிறதா எனக் கேட்டறிந்து அங்கிருந்து பதில் கிடைத்தபின்புதான் பாதுகாப்பில் இருந்து எடுக்கப்படும்.

தேர்தலுக்கு முன்பாக மின்னணு வாக்கு எந்திரமும், வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரமும் தனித்தனியாக பாதுகாக்கப்படும். தேர்தல் முடிந்தபின் ஒரே யூனிட்டாக பாதுகாக்கப்பட்டு ஒரே மாதிரியாக சீல் வைக்கப்படும். தேர்தல் முடிந்தபின் மீண்டும் சீல் வைக்கப்பட்டு, தேர்தல் அதிகாரி கையொப்பமிட்டு பதிவு செய்யப்படும்.

மின்னணு வாக்கு எந்திரத்தில் 1,024 வாக்கு சின்னங்களை பதிவேற்ற செய்யமுடியும் அளவுக்கு அதற்கு திறன் இருக்கிறது. மின்னணு வாக்கு எந்திரங்கள் கட்சி சின்னங்கள் அல்லது கட்சியின் பெயர்களை அங்கீகரிக்காது.

Supreme Court.jpg

வாக்கு எந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ள அடையாளங்கள், பட்டன்களை மட்டுமே அடையாளம் காண முடியும். மின்னணு வாக்கு எந்திரம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள்தான் அதற்குரிய புரோகிராம் செய்கிறார்கள். எந்த கட்சிக்கு எந்த பட்டன் கிடைக்கும் என தயாரிப்பாளருக்கே தெரியாது.

இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்