Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

வெறுப்புக்கு எதிராக அன்பின் கடையை திறங்கள் – வாக்காளர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்

PRIYA19-04-2024
வெறுப்புக்கு எதிராக அன்பின் கடையை திறங்கள் – வாக்காளர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்

வெறுப்புணர்வுக்கு எதிராக அன்பின் கடையை திறக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் அவர் இட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:3-

இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. உங்களுடைய ஒவ்வொரு வாக்கும் இந்தியாவின் ஜனநாயகத்தையும் அதன் பரம்பரையையும் காக்கும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

வெளியே செல்லுங்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஆன்மாவில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு உங்கள் வாக்கு என்ற தைலத்தை தடவி ஜனநாயகத்தை பலப்படுத்துங்கள். நாடு முழுவதும் வெறுப்புணர்வை தோற்கடித்து அன்பின் கடையை திறங்கள்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்

இந்த பதிவோடு காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் மிக முக்கியமான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட உத்திரவாதம், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றை பட்டியலிடும் கிராபிக்சையும் பகிர்ந்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 2024க்கான முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்க உள்ள தேர்தலின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகும்.

முதல்கட்ட தேர்தலில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, சர்பானந்தா சோனாவால், புபேந்த்ர யாதவ் போட்டியிடும் தொகுதிகளுக்கு இன்று வாக்குபதிவு நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் கவுரவ் கோகோய், திமுக வேட்பாளர் கனிமொழி, பாஜக வேட்பாளர் அண்ணாமலை போட்டியிடம் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

மக்களவைத் தேர்தலோடு அருணாச்சல பிரதேசத்தில் 60 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத்துக்கும் 32 தொகுதிகள் கொண்ட சிக்கிம் சட்டமன்றத்துக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்