Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

மணிப்பூர் தேர்தலில், ஆயுதம் தாங்கிய கும்பல் துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம்

CHENDUR PANDIAN.K19-04-2024
மணிப்பூர் தேர்தலில், ஆயுதம் தாங்கிய கும்பல் துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம்

புதுடெல்லி

மணிப்பூர், மொய்ராங்க் பகுதியில் தமன்போக்பியில் உள்ள வாக்குச் சாவடியில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்களுக்கும் வாக்காளர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் பதற்றம் நிலவி வருகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் இன கலவரம் காரணமாக இடம்பெருந்துள்ள நிறத்தால் 18 ஆயிரம் பேர் வாக்களிப்பதற்காக 85 சிறப்பு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பழங்குடி இன தொகுதியான மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி காங்கிரஸ் மற்றும் இரு சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக அதன் கூட்டணி கட்சியான என்பி எப் கட்சியை ஆதரிக்கிறது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் மலைப்பகுதியை சேர்ந்த துக்கி மற்றும் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் மெய்தி இன மக்களுக்கு இடையே பெரிய அளவிலான கலவரம் மூண்டது. இதில் 200க்கும் அதிகமான பேர் இறந்தனர்.

8 லட்சம் பெண்கள் உள்பட 15 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்கள் இந்த தொகுதியில் உள்ளனர். ஏற்கனவே கலவரம் மூண்ட பகுதி என்பதால் மத்திய படைகளைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கிய நடைபெற்று வரும் நிலையில், வாக்குரிமையைப் பயன்படுத்த வரிசையில் நின்ற வாக்களர்களிடையே வன்முறை ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரின் ஒரு சில இடங்களில் அமைதியின்மை நிலவுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட தோங்ஜு சட்டமன்றத் தொகுதியில் உள்ளூர் மக்களுக்கும் அடையாளம் தெரியாத மர்ம நபர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங், லுவாங்சங்பாம் மாமாங் லைகாயில் வாக்களித்தார். மாநிலத்தின் பழங்குடி மக்களைக் காப்பாற்றவும், ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு அவர் மக்களை வலியுறுத்தினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்