Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

தேர்தல் முடிந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தின் உள்பகுதியில் பறக்கும் படை வாபஸ்

SAMYUKTHA19-04-2024
தேர்தல் முடிந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தின் உள்பகுதியில் பறக்கும் படை வாபஸ்

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தின் உள்பகுதியில் பறக்கும் படை வாபஸ் பெறப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் கூறினார்.

தமிழகத்தில் எல்லை பகுதியான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் பறக்கும் படை சோதனை ஜூன் 4ம் தேதி வரை நடைபெறும். இந்த பகுதியில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. அதற்கு மேல் எடுத்துச் சென்றால் முறையான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். தமிழகத்தில் மற்ற பகுதியில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு, வீடியோ கண்காணிப்பு குழு வாபஸ் பெறப்படும். இதுகுறித்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வெயில் அதிகமாக இருந்ததால் மாலை 3 மணிக்கு மேல் அதிகம் பேர் வாக்குப்போட வந்துள்ளனர். 6 மணிக்கு மேல் கூட அதிகம் பேர் வரிசையில் நின்று டோக்கன் பெற்று வாக்களித்தனர். மறுதேர்தல் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. இன்று தான் தேர்தல் பார்வையாளர்கள் தெரிவிப்பார்கள். மின்னணு வாக்குப்பதிவு பற்றி பெரிய அளவில் பிரச்னை இல்லை. இருந்தாலும் நாளை 12 மணிக்கு தான் தெரியவரும்.

தமிழகத்தில் பெரிய அளவில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லை. சில இடங்களில் மட்டும் சில வாக்குவாதம் மட்டுமே இருந்தது. அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்