Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

5 வாலிபர்களுக்கு சிறை தண்டனை ஆட்டோ டிரைவரை கொலை செய்ய முயற்சி - சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

SAMYUKTHA19-04-2024
5 வாலிபர்களுக்கு சிறை தண்டனை ஆட்டோ டிரைவரை கொலை செய்ய முயற்சி - சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

ஆட்டோ டிரைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 5 வாலிபர்களுக்கு சிறை தண்டனை விதித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை வியாசர்பாடி தாமோதரன் நகர் பகுதியை சேர்ந்தவர் மாயக்கிருஷ்ணன (34). ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்தாண்டு மார்ச் 24ல் மூலக்கடை ஐயப்பா தியேட்டர் அருகே இவர் சவாரி சென்றபோது, வியாசர்பாடி பகுதியை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் மாயக்கிருஷ்ணனுடன் தகராறு செய்துள்ளனர். இந்த நிலையில் மறுநாள் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் மாயக்கிருஷ்ணன் நின்றிருந்த போது அங்கு கூடியிருந்த 5க்கும் மேற்பட்ட கும்பல் அவரை கத்தியால் வெட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த மாயக்கிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து, மாயக்கிருஷ்ணனின் மனைவி கலைப்பிரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி, வியாசர்பாடி பகுதியை சேர்ந்த அமர் (28), பிரகாஷ் (25), சஞ்சய் (21), சதீஷ்குமார் (28). மதன் (23), பிரேம்நாத் (22) ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.கோவிந்தராஜன் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அமர் என்பவருக்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், பிரகாஷுக்கு ஓராண்டும், சஞ்சய்க்கு 4 ஆண்டும், சதீஷ்குமாருக்கு 2 ஆண்டும், மதனுக்கு 2 ஆண்டும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மொத்தம் 75 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை பாதிக்கப்பட்ட மாயக்கிருஷ்ணனுக்கு வழங்க வேண்டும். பிரேம்நாத் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்று தீர்ப்பளித்தார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்