Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

நாடு வல்லரசாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

SAMYUKTHA19-04-2024
நாடு வல்லரசாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

நாடு வல்லரசாக அனைவரும் வாக்களிக்க வேண்டும், என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று வாக்களித்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி: இந்திய ஜனநாயகத்தின் தேர்தல் திருவிழா தமிழகத்தில் முதல் கட்டமாக நடைபெற்றது. தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொருவரின் உரிமை. இந்த நாட்டின் வளர்ச்சி தேசத்தினுடைய வளர்ச்சி என்பதை மனதில் வைத்துக் கொண்டும், இந்த தேசம் 2047ல் வல்லரசு நாடாக வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும்

இதில் கூடுதல் சிறப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள் இந்த முறை மிக வேகமாக தங்களுடைய வாக்குகளை பதிவு செய்ததை பல இடங்களில் பார்க்க முடிந்தது. இதில் அடுத்த 25 ஆண்டு காலத்தில் இந்த தேசத்தை ஆளப் போகிறவர்கள் இந்த முதல் முறை வாக்கு செலுத்தக்கூடிய வாக்காளர்கள் தான். நான் வாக்கு செலுத்த வந்த இந்த வாக்கு சாவடி மையத்தில் ஏற்பாடுகளும் சிறப்பாக தான் இருக்கிறது. வாக்கு மையத்தை பொறுத்தவரை அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

வாககு சாவடிகளில் பொதுவாக சில நேரங்களில் குளறுபடிகள் வருவது சகஜம்தான். அதனை உடனடியாக வாக்கு மையத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரி செய்வார்கள். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் குறித்து பேசுவது முறையாக இருக்காது. ஆனாலும் ஒரு வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். அதேபோல ஊழலற்ற பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையான வாக்குகளை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்