Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

மக்களவை தேர்தல்: வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு

ESWAR19-04-2024
மக்களவை தேர்தல்: வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு

சேலத்தில், வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதியான இன்று காலை முதலே தேர்தல் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் எதிர்பாராத விதமாக உயிரிழிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில், வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து பழனிசாமி (65) மற்றும் செந்தாரப்பட்டியில், சின்னப்பொண்ணு(77) என்பவர் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சேலம் கெங்கவல்லி அருகே செந்தராபட்டி ஊராட்ச்சி தொடக்க பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க சென்ற 77 வயது மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதேபோன்று சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்ற சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (65) என்பவர் உயிரிழந்தார். பழனிசாமி தனது மனைவியுடன் வாக்களிக்க சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணமாக இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்