Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

கொளத்தூர் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - திருவிக நகரில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா வாக்களித்தனர்

SAMYUKTHA19-04-2024
கொளத்தூர் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - திருவிக நகரில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா வாக்களித்தனர்

தமிழகத்தில் 18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது, முதல்வர் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்தது. திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர், திரு.வி.க நகர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு இன்று காலை முதலே விறுவிறுப்பாக தொடங்கியது. திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி செல்லப்பா தெருவில் உள்ள நடுநிலைப்பள்ளியில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தனது வாக்கை வரிசையில் நின்று பதிவு செய்தார். இதேபோன்று, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணதாஸ் சாலையில் உள்ள பள்ளிக்கு வந்து வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்தார்.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்கேபி நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினரும் வடசென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான ஆர்.டி.சேகர் தனது வாக்கை பதிவு செய்தார். மேலும், முதல்வரின் சொந்தத் தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று காலை முதலே விறுவிறுப்பான வாக்கு பதிவு தொடங்கியது. பெரம்பூர் ஓட்டேரி உள்ளிட்ட சில இடங்களில் வாக்குப்பதிவின் போது சில வாக்குச்சாவடி மையங்களில் இயந்திரங்கள் பழுதானதால் சுமார் 10 நிமிடம் வரை வாக்குப்பதிவு தாமதப்படுத்தப்பட்டது. இருப்பினும் அதிகாரிகள் உடனடியாக அதனை சரி செய்த பின்பு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்