Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

21 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர் -இலங்கை கடற்படையினரால் சிறையில் இருந்து விடுவிப்பு

SAMYUKTHA19-04-2024
21 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர் -இலங்கை கடற்படையினரால் சிறையில் இருந்து விடுவிப்பு

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் நேற்று தாயகம் திரும்பினர். ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குச் சென்ற அந்தோணி ஆரோன், மகத்துவம் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகுகளிலிருந்த 7 மீனவர்கள், காரைக்காலிலிருந்து கடலுக்குச் சென்ற ஜெயமதி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை சிறைப்பிடித்து அதிலிருந்த 15 மீனவர்கள் என 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் தனித்தனியாக அடைத்தனர்.

இந்நிலையில் மார்ச் 28 அன்று மன்னார் நீதிமன்றம் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர்களை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்து உத்திரவிட்டது. ஏப்.5 அன்று ஊர்காவல்துறை நீதிமன்றம் 15 காரைக்கால் மீனவர்களில் படகின் ஓட்டுநர் முருகானந்தம் (48) என்பவருக்கு மட்டும் ஆறு மாத கால சிறை தண்டனை விதித்தும், மற்ற 14 மீனவர்களை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டது.

விடுதலையான 21 மீனவர்கள் நேற்று மதியம் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கிருந்து 7 மீனவர்கள் ராமேஸ்வரத்திற்கும், 14 மீனவர்கள் காரைக்காலுக்கும் தனித்தனி வாகனங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் நேற்று காலை அழைத்து வரப்பட்டனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்