Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

வாக்குச்சாவடிக்குள் நுழைந்து பாஜ வேட்பாளர் வாக்குவாதம் - அடையாள அட்டை இல்லாததால் முகவருக்கு அனுமதி மறுப்பு

SAMYUKTHA19-04-2024
வாக்குச்சாவடிக்குள் நுழைந்து பாஜ வேட்பாளர் வாக்குவாதம் - அடையாள அட்டை இல்லாததால் முகவருக்கு அனுமதி மறுப்பு

வேடசந்தூர் அருகே அடையாள அட்டை இல்லாததால் முகவருக்கு அனுமதி மறுப்பு தெரிவித்ததால், வாக்குச்சாவடிக்குள் புகுந்து பாஜ வேட்பாளர், கட்சியினர் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேடசந்தூர் அருகே நாகையகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பூத் எண் 109ல் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது உரிய அடையாள அட்டை இல்லை என கூறி பாஜவின் வாக்குச்சாவடி முகவர் ஆறுமுகம் என்பவரை தேர்தல் அதிகாரிகள் காலையிலிருந்தே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதையறிந்த பாஜ கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குச்சாவடிக்கு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவலறிந்தது வந்த 50க்கும் மேற்பட்ட போலீசார் பாஜ வேட்பாளர் செந்தில்நாதன் மற்றும் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ‘ஒரு தேசிய கட்சியின் வாக்குச்சாவடி முகவர் இல்லாமல் எவ்வாறு தேர்தல் நடத்தலாம்? முகவருக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றொரு தேதியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்’ எனக்கூறி பாஜவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்