Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

எம்கேபி நகர் வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு விழுவதாக புகார் - அதிமுகவினர் மறியல்

SAMYUKTHA19-04-2024
எம்கேபி நகர் வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு விழுவதாக புகார் - அதிமுகவினர் மறியல்

வியாசர்பாடி எம்கேபி நகர் பகுதியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு விழுவதாக கூறி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வதந்தி பரப்பியவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி எம்கேபி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று மதியம் 11 மணியளவில் அதிமுகவைச் சேர்ந்த விஜய் என்பவர் வாக்கு போட சென்றுள்ளார். அப்பொழுது அவர் 150 வது பூத்தில் அதிமுகவிற்கு வாக்கு போட்டதும் தாமரைக்கு விழுந்ததாக கூறி அங்கு இருந்தவர்களை அழைத்துள்ளார். இது குறித்து கேள்விப்பட்ட அதிமுகவினர் திரண்டு வந்து தேர்தல் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு சுமார் 45 நிமிடங்கள் அந்த பூத்தில் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து வாக்குப்பதிவு இயந்திர பொறியாளர் மற்றும் தேர்தல் நடத்தும் உயர் அதிகாரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மின்னணு வாக்கு இயந்திரத்தை சரிபார்த்தபோது அதில் எந்த பிழையும் இல்லை என தெரிய வந்தது.

மேலும் இது குறித்து அங்கிருந்த விஜய் என்ற நபர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்ததால் போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு செல்ல முயற்சி செய்தனர். அப்போது அதிமுகவினர் சுமார் 20 பேர் தேர்தல் நடக்கும் மையத்தின் வெளியே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து போலீசார் குறிப்பிட்ட வதந்தி பரப்பிய விஜய் என்ற நபரை எச்சரித்து அனுப்பினர். . இதனைத் தொடர்ந்து அங்கிருந்த அதிமுகவினரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்