Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

அதிக வட்டி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி.... கணவன், மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை... - சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

SAMYUKTHA19-04-2024
அதிக வட்டி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி.... கணவன், மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை... - சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

அதிக வட்டி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் கணவன், மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை மாதவரம் மில்க் காலனி பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (60), இவரது மனைவி ஜெயசீலி (56). இவர்கள் அந்த பகுதியில் சிட் பண்ட் நடத்தி வந்துள்ளனர். இதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளனர். இதை நம்பி பலர் இவர்களின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில், முதலீடு முதிர்வடைந்த நிலையில் அந்த தொகையை முதலீட்டாளர்களக்கு திரும்ப தராமல் இழுத்தடித்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் நிர்வாகிகளான குமரேசன் அவரது மனைவி ஜெயசீலி ஆகியோர் மீது நிதி நிறுவன மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கே.தனசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.பாபு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, கல்வி, திருமணம் போன்ற காரியங்களுக்காக, கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் நடத்திய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். உத்தரவாதத்தின்படி முதலீட்டு தொகை முதிர்வடைந்தவுடன் திரும்ப தரவேண்டும். ஆனால், தரவில்லை. இதனால் முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிங்களுடன் நிரூபிகப்பட்டுள்ளதால் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இருவருக்கும் அபராதமாக மொத்தம் 24.60 லட்சம் விதிக்கப்படுகிறது. அபராத தொகையில், 21 லட்சத்து 28,751 ரூபாயை நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டிருக்கு தகுதியான முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்