Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

இந்திய நாடு என் வீடு'-பாடலை பாடி வாக்களித்தார் நடிகர் வடிவேலு

SAMYUKTHA19-04-2024
இந்திய நாடு என் வீடு'-பாடலை பாடி வாக்களித்தார் நடிகர் வடிவேலு

தேர்தலில் வாக்களிக்க வந்த பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, ‘இந்திய நாடு என் வீடு’ என்ற பாடலைப் பாடி அசத்தினார்.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு இன்று வந்தார். பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் வடிவேலு கூறுகையில், ஜனநாயக கடமையாக இந்த வாக்கினை நான் செலுத்தி இருக்கிறேன். அனைவரும் அவரவரின் வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும், வெயில் கடுமையாக இருக்கிறது. பைப்பை திறந்தால் பச்சை தண்ணீருக்கு பதிலாக சுடுதண்ணீர் வருகிறது. எனவே மாலை நேரத்தில் மக்கள் வந்து வாக்களிப்பார்கள். மேலும், படத்தின் ஷூட்டிங் அதிகமாக இருந்ததால் என்னால் கடந்த முறை போல வாக்கு கேட்டு சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. இந்தியா தான் தெரியும் டிஜிட்டல் எனக்கு தெரியாது என்று இந்தியா குறித்து கண்ணதாசன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார் என ‘‘இந்திய நாடு என் நாடு இந்தியன் என்பது என் பேரு'' என்ற பாடலை பாடினார். அப்போது இந்தியா என்பதை வேறு மாதிரி திரிக்கிறார்களே என்ற கேள்விக்கு, ‘‘வேற மாதிரி எடுத்து திரிச்சு போட்டு கலவரத்தை உண்டாக்கி விட்டு போங்க’’ என நகைச்சுவையாக பதில் அளித்தார். பின்னர் இம்முறை ஆட்சி மாற்றம் வருமா என்ற கேள்விக்கு எனது படம் 23ஆம் புலிகேசியில் மாற்றம் ஒன்றே மாறாதது எனக் கூறியுள்ளேன் என்று தெரிவித்தார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்