Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

மினி லாரியை வாடகைக்கு பிடித்து சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் - ஜனநாயக கடமையாற்ற ஆர்வம்

SAMYUKTHA19-04-2024
மினி லாரியை வாடகைக்கு பிடித்து சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் - ஜனநாயக கடமையாற்ற ஆர்வம்

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மினி லாரியில் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் சிலர் பயணம் மேற்கொண்டு சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

தமிழகம் மற்றும் புதுவை உள்பட 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் கையெழுத்து இயக்கம், மனிதச்சங்கிலி, ரங்கோலி போட்டி, உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் குடிநீர் கேன்கள், காஸ் சிலிண்டர்கள் ஆகியவற்றில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் அனைத்து அரசு மற்றும் தனியார் தொழில் துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒருநாள் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதேபோல், தமிழக அரசு சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக அரசு போக்குவரத்து துறை சார்பில் 2,899 அரசு பேருந்துகள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இயக்கப்பட்டன. மேலும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டன. சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று சேர்ந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிதம்பரம், ஜெயங்கொண்டம், அரியலூர் பகுதிகளுக்குச் செல்ல இன்று அதிகாலை பேருந்திற்காக காத்திருந்தனர். அப்போது, தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற அவர்கள் ஒரே நேரத்தில் பஸ் நிலையத்தில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. பேருந்து நிலையத்திற்குள் வந்து நின்றவுடன் முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறிய பொதுமக்கள் இருக்கைகளை பிடித்து அமர்ந்தனர். இதனால் பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் சிலர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே சென்று மினி லாரி ஒன்றை வாடகைக்கு ஏற்பாடு செய்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். அப்போது, பஸ் நிலையத்தில் நின்றிருந்த பயணிகளிடம் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்று சேர வேண்டும் என்றும், தேர்தல் திருவிழாவில் ஜனநாயக கடமையாற்ற வாக்களிக்க செல்கிறோம் என்றும் ஒருமித்த குரலில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்