Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

கள்ள ஓட்டு போடப்பட்டதாக பாமக வேட்பாளர் போராட்டம் - இறந்தவர்கள், வெளியூரில் இருப்பவர்கள் பெயரில் மோசடி

SAMYUKTHA19-04-2024
கள்ள ஓட்டு போடப்பட்டதாக பாமக வேட்பாளர் போராட்டம் - இறந்தவர்கள், வெளியூரில் இருப்பவர்கள் பெயரில் மோசடி

ராணிப்பேட்டையில் மாந்தாங்கல் மோட்டூர் வாக்குச்சாவடி மையத்தில் கள்ளஓட்டு போட்டதாக கூறி வாக்குச்சாவடி முன்பு பாமக வேட்பாளர் பாலு போராட்டத்தில் ஈடுபட்டார். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராணிப்பேட்டை நகராட்சி மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் கங்காதரா நிதியுதவி தொடக்கப்பள்ளியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தநிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் இறந்துபோன மற்றும் வெளியூர் சென்றுவிட்ட நபர்களின் பெயரில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளதாக பாமக, அதிமுக பூத் ஏஜெண்ட்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அரைமணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் அங்கு வந்த பாமக வேட்பாளர் பாலு, அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினரிடம் வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும், கள்ள ஓட்டு போட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து வாக்குச்சாவடி அதிகாரி கள்ளஓட்டு போட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால் வாக்குப்பதிவு நிறுத்தப்படாததால் வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் பாமக வேட்பாளர் பாலு, பாமகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாமக மற்றும் பாஜவினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் வழக்கம் போல் வாக்குப்பதிவு நடந்தது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்