Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

காரில் கள்ளஓட்டு போடவந்ததாக 7 பேர் கைது - வேன் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு

SAMYUKTHA19-04-2024
காரில் கள்ளஓட்டு போடவந்ததாக 7 பேர் கைது - வேன் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு

தூத்துக்குடி அருகே பொட்டலூரணியில் காரில் கள்ளஓட்டு போடவந்தவர்கள் என 7பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது பொட்டலூரணி கிராமம். இங்கு பொதுமக்கள் அங்குள்ள மீன்பதன ஆலைகளை அகற்றகோரி தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மதியம் ஒரு காரில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் பொட்டலூரணி ஊரில் உள்ளே கண்மாயை சுற்றியவாறு வந்துள்ளனர். அவர்கள் ஏழு பேரும் வெளியூரை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி போலீசாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் 7 பேரையும் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து ஏழு பேரையும் போலீசார் பிடித்து ஒரு வேனில் பொட்டலூரணி வழியாக காவல் நிலையம் கொண்டு செல்ல முயன்றனர். அப்போது பொதுமக்கள் வாகனத்தை முற்றுகையிட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். ஏழு பேரையும் வேனிலிருந்து கீழே இறக்கி விட கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் மறுத்ததை தொடர்ந்து வேன் கண்ணாடியை உடைத்தும், டயர்களில் காற்றை பிடுங்கி விட்டும், சாலைகளில் படுத்தும், கற்களை வைத்து சாலையை மறித்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொட்டலூரணி பகுதி பரபரப்பாக காணப்பட்டது பின்னர் போலீசார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊரில் உள்ள இரண்டு நபர்களை மட்டும் வேனில் இருந்தவர்களை பார்க்க அனுமதித்த பிறகு அந்த வேனை விடுவித்தனர். இதனையடுத்து அந்த ஏழு பேரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்