Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

பலாப்பழம் உள்ளவரிடம் ஈக்கள் போகும் அதிமுகவினர் போக மாட்டார்கள் - நையாண்டி செய்த செல்லூர் ராஜூ

SAMYUKTHA19-04-2024
பலாப்பழம் உள்ளவரிடம் ஈக்கள் போகும் அதிமுகவினர் போக மாட்டார்கள் - நையாண்டி செய்த செல்லூர் ராஜூ

பலாப்பழத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பவரிடம் ஈக்கள் வேண்டுமானால் போகும், ஆனால் அதிமுக தொண்டர்கள் எவரும் போகமாட்டார்கள் என செல்லூர் ராஜூ கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று காலை மதுரை அரசு மீனாட்சி கல்லூரி வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். அவரிடம், ‘தேர்தலுக்கு பிறகு அதிமுக தன்னிடம் வந்துவிடும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளாரே?’ என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதலளித்த செல்லூர் ராஜூ, ‘‘பலாப்பழத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பவரிடம் ஈக்கள் வேண்டுமானால் போகும். அதிமுக தொண்டர் எவரும் அங்கே போக மாட்டார்கள். பாஜ 400 சீட்டுகளை பிடிக்குமா என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் வழங்கும் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. மக்கள் எந்த தீர்ப்பைக் கொடுத்தாலும் ஏற்போம். எங்களுக்கான பிரதமர் என்றெல்லாம் ஒன்றுமில்லை. தேர்ந்தெடுத்து வருகிறவர்கள் சொல்வதே பிரதமர். தேர்தலுக்கு பிறகே யார் பிரதமர் எனத்தெரியவரும். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க, தமிழ்நாட்டின் வளங்கள் காக்க குரல் கொடுக்கும் வகையில் ஒவ்வொரு மாநில கட்சி முடிவெடுப்பதைப் போலவே, நாங்களும் முடிவெடுப்போம். பாஜ தான் மோடியை பிரதமர் என்கின்றனர். அதற்கும் ஒரு தலைமை இருக்கிறது. அவர்கள் சொல்லவில்லை. 2 முறைக்கு மேல் பாஜவில் ஒருவர் பிரதமராக இருக்க முடியாது எனச் சொல்வார்கள். அது எப்படி எனத்தெரியவில்லை. மக்கள் தான் எஜமானர்கள். மக்கள் முடிவெடுத்த பிறகுதானே எதுவுமே. நிச்சயமாக இரு திராவிட இயக்கங்களின் தலைமையிலான கூட்டணியையே மக்கள் ஆதரிப்பார்கள். தமிழ்நாட்டின் இந்த இரு கழகங்களும் விரிந்து பரந்துள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் முகவர்கள் போட்டுள்ளோம். சில கட்சிகளுக்கு அந்தமாதிரி வாய்ப்பில்லை. கிராமங்களில் சில கட்சிகள் ஆளே போட முடியாது. இரு திராவிட கழகங்கள் தான் சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்