Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

திமுக நிர்வாகியை தாக்கிய போலீசார் - இழுத்து சென்றதால் பரபரப்பு

SAMYUKTHA19-04-2024
திமுக நிர்வாகியை தாக்கிய போலீசார் - இழுத்து சென்றதால் பரபரப்பு

கோவையில் திமுக நிர்வாகியை போலீசார் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று வாக்கு பதிவு நடந்தது. இந்நிலையில், கோவை பிஎன் புதூரில் உள்ள வாக்குச்சாவடி அருகே 200 மீட்டருக்கு அப்பால் திமுக உள்ளிட்ட கட்சியினர் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் தங்களது கட்சி சின்னத்தை வைத்திருந்தனர். இது தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை எச்சரித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கட்சி சின்னத்தை மறைத்து வைத்தனர். தொடர்ந்து அங்கு போடப்பட்டிருந்த பந்தலை அகற்றுமாறு போலீசார் தெரிவித்தனர். இதில் அங்கு இருந்த போலீசாருக்கும், திமுக பகுதி செயலாளர் பாக்யராஜ் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் போலீசார் திமுக பகுதி செயலாளர் பாக்யராஜை தாக்கி தர, தரவென இழுத்து சென்றதாக தெரிகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘‘போலீசார் அவரை தாக்கவில்லை. அவர் உதவி கமிஷனர் சட்டையை பிடித்ததால், இழுத்து சென்றோம்’’ என தெரிவித்தனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்