Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

"நாட்டில் ஊழல் பள்ளி நடத்தி வருகிறார், பிரதமர் மோடி: அதன் அறிவியல் ஆசிரியரும் அவர்தான்" ; ராகுல் கடும் தாக்கு

CHENDUR PANDIAN.K20-04-2024
"நாட்டில் ஊழல் பள்ளி நடத்தி வருகிறார், பிரதமர் மோடி: அதன் அறிவியல் ஆசிரியரும் அவர்தான்" ; ராகுல் கடும் தாக்கு

புதுடெல்லி

நாட்டில் ஊழல் பள்ளியை தொடங்கி நடத்தி வரும் பிரதமர் மோடி அதன் அறிவியல் ஆசிரியராக செயல்பட்டு வருகிறார். விரைவில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழல் பள்ளி மூடப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்து இருக்கிறார்.

இது குறித்த சமூக வலைதள பதிவு அவர் கூறியிருப்பதாவது:-

"நரேந்திர மோடி நாட்டில் ஊழல் பள்ளி நடத்தி வருகிறார். அதில் "முழு ஊழல் அறிவியல்" பாடத்தில் நன்கொடை வணிகம் உள்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் அவரே ஆசிரியராக இருந்து விரிவாக கற்பித்து வருகிறார்.

'ரெய்டு'களை நடத்தி நன்கடை வாசிப்பது எப்படி? நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன? ஊழல்வாதிகளை கழுவும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது? அரசின் விசாரணை அமைப்பு 'ஏஜென்சி'களை மீட்பு முகவர்கள் ஆக்கி, ஜாமீன் மற்றும் ஜெயில் விளையாட்டு எப்படி விளையாடுவது? ஆகியவை குறித்தும் அந்தப் பள்ளியில் கற்பிக்கப்படுகின்றன.

"ஊழலின் குகை"யாக மாறிவிட்ட பாஜக தலைவர்களுக்கு இந்தப் பள்ளியில் பாடம் கற்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிந்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் இந்த ஊழல் பள்ளி பூட்டப்பட்டு இந்த படிப்பு என்றென்றும் மூடப்படும்".

இவ்வாறு ராகுல் அந்த பதிவில் கூறி இருக்கிறார்.

7 கட்டங்களாக நடத்தப்படும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் முதல் கெட்ட வார்த்தை பதிவு 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நேற்று நடைபெற்றது.

இரண்டாம் கட்ட வாக்கு பதிவு வருகிற 26 ஆம் தேதி நடைபெறும். அதைத் தொடர்ந்து மே 7, மே 13, மே 20, மே 25, மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள் நடைபெறும். ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் என்ன போட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்