Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

92 வயது முதியவர்.. ஒற்றை வாக்கு.. 18 கி.மீ மலையேறிய அதிகாரிகள்..

ESWAR20-04-2024
92 வயது முதியவர்.. ஒற்றை வாக்கு.. 18 கி.மீ மலையேறிய அதிகாரிகள்..

கேரளாவில் 92 வயது முதியவரின் வாக்கை பதிவு செய்ய, தேர்தல் அதிகாரிகள் குழுவினர் 18 கிலோமீட்டர் தூரம் மலையேறி சென்றுள்ளனர்.

கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 26-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், கேரளாவில் தபால் ஓட்டுக்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக உடல்நலம் குன்றிய 92 வயது முதியவரின் வாக்கை சேகரிப்பதற்காக, 3 பெண்கள் உட்பட 9 பேர் கொண்ட தேர்தல் அதிகாரிகள் குழு, 18 கிலோமீட்டர் தூரம் மலையேறி சென்றுள்ளனர். கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள எடமலக்குடி என்ற பழங்குடியின மலைக்கிராமத்தில் வசிக்கும், சிவலிங்கம் என்ற முதியவரின் வாக்கை பதிவு செய்து வந்தனர். வனப்பகுதிக்குள் சென்றதால் தசைப்பிடிப்பு மற்றும் உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை சந்தித்தாலும், ஒரு சவாலான பணியை சிறப்பாக செய்து முடித்ததாக அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்