Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

ஹேமாமாலினி சொத்து மதிப்பு ரூ.278 கோடி DK சுரேஷ் சொத்து மதிப்பு ரூ.593 கோடி

ESWAR20-04-2024
ஹேமாமாலினி சொத்து மதிப்பு ரூ.278 கோடி
DK சுரேஷ் சொத்து மதிப்பு ரூ.593 கோடி

இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் நடிகை ஹேமாமாலினி, டி.கே.சுரேஷ் மற்றும் ஹெச்.டி.குமாரசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுரா தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிடும் நடிகை ஹேமாமாலினியின் சொத்து மதிப்பு 2019இல் 250 கோடி ரூபாயாக இருந்து தற்போது 278 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

நடிகை ஹேமமாலினியின் கடன் அளவு 2019இல் 13 கோடி ரூபாயாக இருந்து, தற்போது 7.91 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

பெங்களூரு புறநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷின் சொத்து மதிப்பு 2019இல் 338 கோடி ரூபாயாக இருந்து, தற்போது 593 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரின் சகோதரரான டி.கே.சுரேஷின் கடன் சுமை 2019இல் 51 கோடி ரூபாயாக இருந்து தற்போது 150 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மாண்டியா தொகுதியின் மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் ஹெ.டி.குமாரசாமியின் சொத்து மதிப்பு 2023இல் 189.25 கோடி ரூபாயாக இருந்து, தற்போது 217 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரான ஹெ.டி.குமாரசாமியின் கடன் சுமை 2023இல் 76.66 கோடி ரூபாயாக இருந்து தற்போது 82.17 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்