Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் மோடி ஆதரவு அலை இல்லை... அனைத்தும் எதிர்ப்பு அலைதான்... - கர்நாடகா முதல்வர் சித்தராமையா கருத்து

SAMYUKTHA20-04-2024
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் மோடி ஆதரவு அலை இல்லை... அனைத்தும் எதிர்ப்பு அலைதான்... - கர்நாடகா முதல்வர் சித்தராமையா கருத்து

கர்நாடக மாநிலத்தில் மட்டுமின்றி இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீச வில்லை. அதேநேரம் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிரான அலையே இந்தியாவில் காணப்படுகிறது என முதல்வர் சித்தராமையா கூறினார். மைசூரு மாநகரில் முதல்வர் சித்தராமையா நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஷிவமொக்காவில் நடந்த கொலை சம்பவத்தை கண்டிக்கிறேன். நேஹா கொலையாளி கைது செய்யப்ட்டுள்ளான். இந்த வழக்கில் குற்றவாளிக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும். போலீஸ் அதிகாரிகள் விரைவாக தண்டனை கிடைக்கும் வகையில் நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தாலும் பாஜவினர் குறை கூறி அரசியல் லாபம் அடைய துடிக்கின்றனர். கொலை எதற்காக நடந்தது? அதை செய்தது யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் பாஜவினர் இதை லவ் ஜிகாத் என கூறி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் மட்டுமின்றி இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீச வில்லை. அதேநேரம் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிரான அலையே இந்தியாவில் காணப்படுகிறது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்த பிறகு கேரண்டி திட்டங்களால் பல கோடி மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது போல் ஒன்றியத்திலும் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும். 2014ல் புதிதாக 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அதன்படி மோடி நடந்து கொள்ளவில்லை. அதற்கு பதில் தவறான ஜிஎஸ்டி வரிவிதிப்பு சட்டத்தினால் பல லட்சம் சிறுதொழிற்சாலைகள் மூடப்பட்டு அதை நடத்திய நபர்கள் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். இதுதான் பாஜவின் 10 வருட ஆட்சியின் சாதனைகள் ஆகும். கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒன்றிய கஜானாவுக்கு அதிக நிதி செல்கிறது. ஆனால், நமது மாநிலத்திற்கு திரும்ப எதுவும் கிடைக்கவில்லை. வறட்சி மற்றும் நிவாரண நிதியும் அளிக்கப்படவில்லை. இதை மக்களுக்கு எடுத்துக்கூறவே காலி செம்பு விளம்பரம் செய்துள்ளோம். முன்னாள் முதல்வர் குமாரசாமி , மதசார்பற்ற ஜனதா தளம் என ெபயர் வைத்துக்கொண்டு மதவாதிகளுடன் கைகோர்த்துள்ளார். பாஜவுடன் மஜத கூட்டணி அமைத்துள்ளதால் மதவாதி என்பதை வெளிப்படையாக மாஜி முதல்வர் குமாரசாமி மற்றும் மாஜி பிரதமர் தேவகவுடா ஒப்புக்கொண்டுவிட்டனர். எனவே, மஜத கட்சி தேவையில்லை. பாஜவுடன் அதை இணைத்து கொள்வதே சிறந்ததாகும். இவ்வாறு முதல்வர் சித்தராமையா கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்