Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

சாப்பிடும் உணவை கூட அரசியலாக்கும் ‘ஈடி’ - சிறையில் இருக்கும் கெஜ்ரிவால் புகார்

SAMYUKTHA20-04-2024
சாப்பிடும் உணவை கூட அரசியலாக்கும் ‘ஈடி’ - சிறையில் இருக்கும் கெஜ்ரிவால் புகார்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாப்பிடும் உணவைக் கூட அமலாக்கத்துறை அரசியலாக்க முயற்சிப்பதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது. அதனால் அவர் தனது மருத்துவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவரது வீட்டில் இருந்து உணவு வழங்கப்படுகிறது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில், ‘மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் தயாரிக்கப்பட்ட உணவில் மாம்பழம் சேர்க்கப்படவில்லை. மருத்துவர் பரிந்துரைக்கும் உணவு முறைகளை பின்பற்றப்படுகிறது. அவருக்கு சிறையில் இன்சுலின் மருந்து போட்டுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் சாப்பிடும் உணவைக் கூட அரசியலாக்க அமலாக்கத்துறை முயற்சிக்கிறது. இது மிகவும் கீழ்த்தரமான நடவடிக்கை’ என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக அமலாக்கத்துறை தரப்பில், ‘கெஜ்ரிவால் சாப்பிட்ட உணவு அவரது மருத்துவர் தயாரித்த டயட் அட்டவணையுடன் ஒத்துப்போகவில்லை. அவரது சர்க்கரை அளவை பராமரிக்கும் அளவுக்குப் போதுமான மருத்துவ வசதிகள் திகார் சிறையில் உள்ளன. ஜாமீன் பெறுவதற்காக இனிப்பான உணவை அதிகமாக கெஜ்ரிவால் எடுத்துக் கொள்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா, இம்மனுவின் விசாரணையை ஒத்திவைத்தார். தேவைப்பட்டால் சனிக்கிழமைக்குள் பதில் மனு தாக்கல் செய்ய திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்