Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் வகுப்புகள் - உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

SAMYUKTHA20-04-2024
முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் வகுப்புகள் - உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

நடப்பு கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புளை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி முடிந்து அடுத்த சில நாட்களில் புதிய அரசு பொறுப்பேற்கிறது. அதோடு தேர்தல் நடைமுறைகளும் முடிவுக்கு வந்து விடுகிறது. அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் மேல்நிலைக்கல்வி, பியூசி தேர்வுகள் முடிந்து மாணவர்கள் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான நடைமுறைகளும் முடிந்துவிடும். இளநிலை முடித்தவர்கள் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான நடைமுறைகளும் முடிந்துவிடும். இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் கல்விஆண்டுக்கான காலஅட்டவணை அகில இந்திய பல்கலைக்கழக மானியக்குழுவால்(யுஜிசி) வெளியிடப்படுகிறது. இந்த அட்டவணையை அடிப்படையாக கொண்டு, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும் நாள், பருவ தேர்வுகள் மற்றும் விடுமுறைகள் உட்பட அனைத்து அலுவல் விவகாரங்களையும் முடிவு செய்து செயல்படுகின்றன. அதன்படி வரும் கல்வியாண்டுக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தொழில் சாராத படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் வகுப்புகள் தொடங்க வேண்டும். 2ம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை மாதம் 3வது வாரத்துக்குள் கல்லூரிகள் திறக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். அதேபோல், தொழிற்சார்ந்த படிப்புகளில் 2ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஜூலை இறுதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்வியாண்டு நாட்காட்டியை தயாரிக்க வேண்டும். அந்த நாட்காட்டி அடிப்படையில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அகில இந்திய பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து மாநில உயர்கல்வி அமைச்சகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக கல்லூரி கல்வி இணை இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்