Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்கள் - சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

VASUKI RAVICHANDHRAN23-04-2024
ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்கள் - சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா மலர்கள் பூத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்து பூங்காவில் பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

ஊட்டி அரசு ரோஜா பூங்கா ஆசியாவிலேயே அதிக ரக ரோஜா கொண்ட பூங்காவாக உள்ளது. இந்த பூங்காவில் பாரம்பரிய ரோஜாக்கள் ஹைபிரிட் பாலியந்திரா மினியேச்சர் கொடி வகை ரோஜாக்கள் 4000 மேற்பட்ட ரக ரோஜாக்கள் உள்ளது இதில் சிகப்பு வெள்ளை மஞ்சள் பர்ப்பில் மற்றும் இரு வண்ண ரோஜாக்கள் தற்போது பூத்துக் குலுங்க துவங்கியுள்ளது.

ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் வகை ரோஜா வகைகளும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகளும் உள்ளன. மேலும், வனப்பகுதிகளில் காணப்படும் ரோஜா செடிகள் மற்றும் நாட்டு வகை ரோஜா மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டுள்ளன. இச்செடிகளில் தற்போது ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும் நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

ஊட்டியில் கோடை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சுற்றுலா தலங்களான ரோஜா பூங்கா அரசு தாவரவியல் பூங்கா தோட்டக்கலை பூங்கா தேயிலை பூங்கா சுற்றுலா பயணிகள் சென்று கண்டு ரசித்து வருகின்றனர். தேர்தல் விதிமுறை என்பதால் இந்த ஆண்டு ரோஜா கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊட்டியில் கோடை சீசன் களை கட்டத்துவங்கியுள்ளது. அடுத்த மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக தற்போது தாவரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், ரோஜா பூங்காவும் தற்போது தயார் செய்யப்பட்டு வருகின்றன. ஊட்டி ரோஜா பூங்காவில் கடந்த இரு மாதங்களுக்கு முன் அனைத்து செடிகளும் கவாத்து செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்