Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

சட்ட விரோத கல்குவாரியை மூடக்கோரி விவசாயி விஜயகுமார் உண்ணாவிரதம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை

VASUKI RAVICHANDHRAN23-04-2024
சட்ட விரோத கல்குவாரியை மூடக்கோரி விவசாயி விஜயகுமார் உண்ணாவிரதம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சட்ட விரோத கல்குவாரியை மூடக்கோரி பல்லடம் கோடங்கிபாளையத்தில் விவசாயி விஜயகுமார் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கோடங்கி பாளையத்தில் உள்ள, ராமகிருஷ்ணா கல்குவாரி (எழில் ப்ளூ மெட்டல்) மீது உரிய நடவடிக்கை அரசு அதிகாரிகள் எடுக்காததை கண்டித்து நான்கு கோரிக்கைகளை முன் வைத்து இன்று 2 -ஆவது நாளாக மூன்றாம் கட்ட காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டம் விவசாயி விஜயகுமார் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம் புல எண்: 55,56,57 ஆர்.ராமகிருஷ்ணன் SVA எழில் புளு மெட்டல் கல்குவாரிகள் தொடர்பாக நான்கு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இது தொடர்பாக நேற்று (22.04.2024) திங்கள் கிழமை முதல் நாள் உண்ணாவிரத போராட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு வந்த பல்லடம் தாசில்தார், விவசாயி விஜயகுமார் அவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணம் காட்டி போராட்டம் நடத்தக்கூடாது என்று கூறினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி விஜயகுமார் அவர்கள் தனது நியாயமான சட்டப்படியான கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டும்தான் போராட்டத்தை கைவிடுவேன். அதுவரை தனது உண்ணாவிரத போராட்டம் தொடரும். உரிய மேல் நிலையில் இருக்கும் அலுவலர்களிடம் பேசி, சட்டவிரோத கல் குவாரிக்கு உரிய தீர்வு காணுமாறு தனது கருத்தை தாசில்தார் இடம் பதிவு செய்து கொண்டார். இந்த பேச்சுவார்த்தையின் பொழுது மங்களம் காவல் ஆய்வாளர், விவசாயிகள், பொதுமக்களும் உடன் இருந்தனர்.

நேற்று முதல் நாள் நிகழ்வில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விவசாயி விஜயகுமார் மேற்கொண்டு வரும் போராட்டத்தில், சட்டவிரோத கல்குவாரி, கிரசர், எம் - சாண்ட் தொழிகளால் பாதிக்கப்பட்ட அனைவரும் கலந்து கொண்டு தொடர் உண்ணாவிரத போராட்டம் வெற்றியடைய ஆதரவு தெரிவிப்போம். மக்கள் போராட்டமே மகத்தான தீர்வு! என்ற உண்மையை உலகிற்கு உணர்த்துவோம். நீதிக்கான சட்டப்படியான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் விவசாயி விஜயகுமாருக்கு தமிழகமே துணை நிற்போம். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள், சட்ட விரோத கல்குவாரி உரிமையாளர்களுக்காக மேற்கொள்ளும் சட்ட விரோத செயல்பாடுகளை முறியடிப்போம்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகமே, சட்டப்படியாக நடந்துகொள் உழவர்களை போராட்டத்தில் தள்ளாதே என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சட்டவிரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்