Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

சர்க்கரை அளவு அதிகரிப்பு: ஒரு வழியாக, கெஜ்ரிவாலுக்கு சிறையில் இன்சுலின் செலுத்தப்பட்டது.

CHENDUR PANDIAN.K23-04-2024
சர்க்கரை அளவு அதிகரிப்பு: ஒரு வழியாக, கெஜ்ரிவாலுக்கு சிறையில் இன்சுலின் செலுத்தப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியின் தொடர் முயற்சிக்கு பின் சிறையில் இருக்கும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சர்க்கரை அளவு அதிகரித்ததால் இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டது.

டெல்லி அரசின் கலால் கொள்கை தொடா்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு சிறையில் இன்சுலின் வழங்குவதில்லை என கடந்த வெள்ளியன்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதன் காரணமாக தனக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்திருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திகாா் சிறை நிா்வாகம் இன்சுலின் வழங்கக் கோரி ஆம் ஆத்மி கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.

டைப் -2 நீரிழிவு நோயாளியான கேஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 320-ஆக அதிகரித்த பிறகுதான் இன்சுலின் அளிக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

சிறை நிர்வாகம் அறிவிப்பு

நேற்றிரவு 2 யூனிட்கள் இன்சுலின் ஊசியின் மூலம் கெஜ்ரிவாலுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இன்சுலின் செலுத்தப்பட்டதை திகார் சிறை நிர்வாகமும் உறுதி செய்தது.

முன்னதாக திகார் ஜெயிலில் கெஜ்ரிவாலை மெல்ல கொலை செய்ய சதி நடைபெறுவதாகவும் அவருடைய மனைவி மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

ஆனால் இதை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் தனக்கு இன்சுலின் போட்டுக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்து சிறை நிர்வாகம் அனுமதி மறுப்பதாகவும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனிடையே திஹார் சிறைத் தலைமை இயக்குநர், சஞ்சய் பெனிவால் இன்று இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “அனைத்து கைதிகளுக்கும் அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு அவ்வப்போது தேவையான சோதனைகள் நடத்தப்படுவதன் காரணமாக சில சமயங்களில் உணவு கொடுக்கப்படுவதில் தாமதம் ஏற்படலாம்.

உணவு கொடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. நீதிமன்ற உத்தரவு படி, பரிசோதனைகளுக்கு பிறகு அவர் வீட்டு உணவைப் பெறுகிறார். சிறையில் உள்ள சுமார் 900-1000 கைதிகளுக்கு நீரிழிவு நோய் உள்ளது. நான் தினமும் 900-1000 நோயாளிகளை நிர்வகித்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரை, இது பிரச்சினை அல்ல. ஆனால் அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் இதைப் பற்றி பேசினால், இந்த விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன்" என்றார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்