Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

மோடியின் வெறுப்பு பேச்சு; நாட்டின் மதச்சார்பின்மை எதிர்கொண்டுள்ள சவாலுக்கு உதாரணம் – பினாராயி விஜயன் பேச்சு

PRIYA23-04-2024
மோடியின் வெறுப்பு பேச்சு; நாட்டின் மதச்சார்பின்மை எதிர்கொண்டுள்ள சவாலுக்கு உதாரணம் – பினாராயி விஜயன் பேச்சு

பிரதமர் மோடியின் முஸ்லீம்கள் குறித்த வெறுப்புப் பேச்சு, நாட்டின் மதச்சார்பின்மை எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு ஒரு உதாரணம் என கேரள முதல்வர் பினாராயி விஜயன் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநிலத்தில் பன்ஸ்வாரா பிரச்சாரத்தின் போது பேசிய முஸ்லீம் வெறுப்புப் பேச்சை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்து வருகின்றன.

இந்நிலையில் கேரள முதல்வர் பினாராயி விஜயனும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். கன்னூரில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது விஜயன் கூறியதாவது:

முஸ்லீம்களை ஊடுருவல்காரர்கள், பதுக்கல்காரர்கள் என்று இழிவாகக் குறிப்பிடுவது உண்மைக்குப் புறம்பானது. இது அவர்களின் சித்தாந்தத்தின் ஒரு பகுதி. தேர்தல் ஆதாயத்துக்காக பிரதமரே, பிரச்சாரத்தின் போது மதவாத கருத்துக்களை கூறியுள்ளார். இது நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு ஒரு உதாரணமாகும்.

நாட்டின் வளங்களை திருடிக் கொண்டதாக முஸ்லீம்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இந்த இழிவான, மதவாத கருத்துக்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் வெளிப்படையான, ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்த, முற்போக்கு மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றாக திரள வேண்டும்.

தேர்தலின் போது பிரதமர் மோடி, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மதவாத பிரச்சாரம் செய்துள்ளார். இதில் தேர்தல் ஆணையம் தலையிடாமல் இருப்பது, ஆணையத்தின் நடுநிலையை சந்தேகத்துக்கு உள்ளாக்குகிறது. மக்கள் ஆணையத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை உறுதி செய்வதற்கு இந்த விசயத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்