Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

”இரட்டை நாக்கு மன்னர் மோடி” - பிரகாஷ் ராஜ் விமர்சனம்

LENIN DEVARAJAN23-04-2024
”இரட்டை நாக்கு மன்னர் மோடி” - பிரகாஷ் ராஜ் விமர்சனம்

ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தர்மம் என நினைக்கும் மன்னருக்கு(பிரதமர் மோடி) இரண்டு நாக்கு இருக்கிறது. ஒவ்வொரு நாக்கும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறது”,என பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடைப்பெற்றது. வரும் ஏப்ரல் 26-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளதால் நாடு முழுவதும் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், ராஜஸ்தானில் நடைப்பெற்ற பாஜகவின் பரப்புரை கூட்டத்தில் இஸ்லாமிய மதத்தினர் குறித்து பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இதுகுறித்து, பிரபல நடிகரும், அரசியல் விமர்சகருமான பிரகாஷ் ராஜிடம் தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரகாஷ் ராஜ் பதிலளித்ததாவது,

”மல்லிப்பூவில் இருந்து வருகிற மனத்தை போல, மன்னரின்(நரேந்திர மோடி) அசிங்கம் அவரது வாயில் இருந்து வெளியே வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பிரதமர்(மன்மோகன் சிங்) அனைத்து ஒதுக்கப்பட்ட மக்களுக்காக பேசியதை சுட்டிக்காட்டி, இஸ்லாமிய மதத்தினருக்கு எதிராக பிரதமர் மோடி பேசியபோது அவரது உள்நோக்கம் தெரிகிறது. இதுபோல், தமிழ்நாடு, கர்நாடகாவில் பிரதமர் மோடி பேசமாட்டார். இத்தகைய வெறுப்பு பேச்சுகள் வடமாநிலங்களில் எடுபடும் என்பதால் பிரதமர் பேசுகிறார். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தர்மம் என நினைக்கும் மன்னருக்கு இரண்டு நாக்கு இருக்கிறது. ஒவ்வொரு நாக்கும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறது. இப்படி பேசுவதால் பிரதமர் மோடி தலைகுனிய வேண்டும். இதற்கு மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

கேள்வி: தேர்தல் ஆணையம் ஏன் பிரதமர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? உங்கள் கருத்து?

ஒரு திருடனை பற்றி மற்றொரு திருடனிடம் புகார் அளிப்பீர்களா?.தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தான் அமைதியாக இருக்கிறது. மறுபடியும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டில் இனி எதுவும் நடக்காது.

கேள்வி: கடந்த மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் 26 இடங்களில் பாஜக வெற்றிப்பெற்றது. இம்முறை எப்படி இருக்கும்?

அவ்வப்போது மக்களும் அறியாமையில் வாக்களிப்பார்கள். அதே கர்நாடகா மக்கள் தான் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. கடைசியில் தேர்தலில் எந்த கட்சி வெற்றிப்பெற வேண்டும், எந்த கட்சி வெற்றிப்பெறக் கூடாது என்பதை தீர்மானிப்பது மக்கள் தான். தென் இந்தியா இம்முறை பாஜகவுக்கும் நரேந்திர மோடிக்கும் என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்லும்.

சூரத் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனுவில் தவறு இருந்தால் அதற்கு விளக்கமளிக்க கூட அவகாசம் கொடுக்கவில்லை. மீதமுள்ள சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இப்படி தான் பாஜக அரசியல் செய்வார்கள். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு இனம் மற்றும் இனி தேர்தல் இல்லை. இது தான் பாஜகவின் அரசியல்” இவ்வாறு பிரகாஷ் ராஜ் பேசினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்