Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

மதுபானக் கொள்கை முறைகேடு: கெஜ்ரிவால், கே. கவிதாவின் நீதிமன்றக் காவல் நீடிப்பு

PRIYA23-04-2024
மதுபானக் கொள்கை முறைகேடு: கெஜ்ரிவால், கே. கவிதாவின் நீதிமன்றக் காவல் நீடிப்பு

மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிஆர்எஸ் தலைவர் கே. கவிதாவின் நீதிமன்றக் காவலை மே 7ம் தேதி வரை நீடித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுபானக் கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. இந்த வழக்கில் எம்எல்சி உறுப்பினரும் பாரதிய ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சித் தலைவருமான கே. கவிதா கைது செய்யப்பட்டார்.

இவர்கள் இருவரும் தற்போது திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளனர். இன்று இருவரும் டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் கோவா தேர்தல் நிதி மேலாளர் சன்ப்ரீத் சிங்கும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இவர்கள் 3 பேரின் நீதிமன்றக் காவலையும் மே 7ம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சர்க்கரை நோய் தொடர்பாக தினமும் 15 நிமிடங்கள் தனது மருத்துவருடன் மனைவி சுனிதா முன்னிலையில் ஆலோசனை நடத்த அனுமதி கோரி கெஜ்ரிவால் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் அவருக்கு சிறையில் திங்கட்கிழமை மாலை சர்க்கரை அளவு அதிகரித்ததைத் தொடர்ந்து அவருக்கு இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டது. சிறையில் ஊசி செலுத்தப்பட்டது, அனுமாரின் ஆசியால் கிடைத்தாக ஆம் ஆத்மி கட்சியினர் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது நீதிமன்றக் காவலை ரோஸ் அவின்யூ நீதிமன்றம் மே 7ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்