Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

அமைச்சர் எ.வ. வேலுவின் மனைவி மீதான வழக்கு - உரிமத்தை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

ESWAR23-04-2024
அமைச்சர் எ.வ. வேலுவின் மனைவி மீதான வழக்கு -  உரிமத்தை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

அமைச்சர் எ.வ. வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், மாத்தூரில், அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி ஜீவா தலைவராக உள்ள சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை பொறியியல் கல்லூரியின் உரிமத்தை, ரத்து செய்யக் கோரி, திருவண்ணாமலையை சேர்ந்த டி.எஸ். சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் ( AICTE) தான் நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலையை ஆக்கிரமித்து கல்லூரி கட்டப்படவில்லை என கல்லூரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 20 ஏக்கர் பரப்பில் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி, ஏழு ஏக்கரில் மட்டுமே கல்லூரி அமைந்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து, ”இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் ( AICTE) தான் நடவடிக்கை எடுக்க முடியும்” என்று சொல்லி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்