Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

"காங்கிரசார், தங்களை ராமரை விட மேலானவர்கள் என கருதுகிறார்கள்" பிரதமர் மோடி தாக்கு

CHENDUR PANDIAN.K23-04-2024
"காங்கிரசார், தங்களை ராமரை விட மேலானவர்கள் என கருதுகிறார்கள்" பிரதமர் மோடி தாக்கு

காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமரை விட மேலானவர்கள் என்று கருதுவதாக பிரதமர் மோடி தாக்குதல் தொடுத்தார்.

முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நெருங்குகிறது. அந்த தொகுதிகளில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, "காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமரை விட மேலானவர்கள் என்று கருதுகிறார்கள். அதனால்தான் ராமர் கோவில் பிரதிஷ்டை விழா அழைப்பை அவர்கள் நிராகரித்து விட்டனர்.

இது ராமபிரானுக்கு அவ மரியாதை இல்லையா? தாஜா அரசியலில் ஈடுபடுவது என்பது காங்கிரஸாருக்கு மரபணுவிலேயே ஊறிய அம்சம் ஆக மாறிவிட்டது. தங்களுடைய தாஜா அரசியலுக்காக ஏழை எளிய தலித் மக்கள் மற்றும் ஆதிவாசிகள் ஆகியோரின் உரிமைகளை எடுத்துக் கொள்ளவும் காங்கிரஸ் ஆர் தயங்க மாட்டார்கள். ஆனால் இந்த ஏழை எளிய மக்களுக்காகவும் பெண்களுக்காகவும் பாஜக முன்னுரிமை அளிக்கும்" என்றார்.

ப. சிதம்பரத்துக்கு அமித்ஷா பதிலடி

கேரளாவில் பிரசாரம் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்’ என்று கூறினார். இது தொடர்பாக பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "1960-களில் இருந்தே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆயுதமாக சமரச அரசியலை காங்கிரஸ் செய்து வருகிறது. இதற்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். 2014-ல் பிரதமர் மோடி மக்கள் மத்தியில் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திக்க தொடங்கினார்.

ஆனால், வளர்ச்சியை மையப்படுத்தி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சிரமப்படுகிறது. இதனால், அக்கட்சி தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைகிறது. எனவேதான் மீண்டும் ஒருமுறை சமரச அரசியலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை முன்னெடுத்துச் செல்ல காங்கிரஸ் கட்சியினர் விரும்புகிறார்கள். அதனடிப்படையில் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

சிஏஏவின் குறைபாடுகள் என்ன என்பதை ப.சிதம்பரம் கூறவில்லை. மாறாக, சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என்று கூறுகிறார். ஏனென்றால், தங்களின் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை வலுப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அதற்காக இப்படி கூறுகிறார்கள். ஆனால், மக்கள் காங்கிரஸ் கட்சியை நன்கு புரிந்து கொண்டதால், சிதம்பரத்தின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது"என்றார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்