Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

நரேந்திர மோடி நாட்டை ஆண்டது துரதிஷ்டவசமானது – கார்கே சாடல்

PRIYA24-04-2024
நரேந்திர மோடி நாட்டை ஆண்டது துரதிஷ்டவசமானது – கார்கே சாடல்

மோடி போன்ற மனிதர் நாட்டை 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது துரதிஷ்டவசமானது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது –

நான் இங்கு தேர்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்து இருக்கிறேன். வாக்காளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஆனால் பிரதமர் மோடி, இதுவரை தேர்தல் நிகழ்வுகளில் பங்கேற்காத, வாக்களிக்க மட்டும் வெளியில் வரும் கண்ணுக்கு தெரியாத வாக்களர்களை நினைத்து மோடி அஞ்சுகிறார். அதனால் தான் காங்கிரஸ் கட்சியைப் பற்றி மோடி தொடர்ந்து விமர்சிக்கிறார்.

காங்கிரஸ் கட்சி பொருட்டே இல்லை என்றால், ஏன் அவர் காங்கிரஸ் கட்சியை கருத்தில் கொள்கிறார்.

400க்கும் கூடுதலான இடங்களில் வெற்றி என்ற இலக்கை கட்சி எட்டிவிடும் என்பதில் உங்களுக்கு முழு நம்பிக்கை இருந்தால், அப்புறம் ஏன் ஊழல்வாதிகளை கட்சியில் சேர்த்துக் கொள்கிறீர்கள்? காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளில் இருக்கும் வரை தான் அவர்கள் எல்லாம், ஊழல்வாதிகள்.

ஒருபக்கம் மோடி ஊழலை சகித்துக் கொள்ளமாட்டார் என்று கூறுகிறீர்கள், மறுபுறம் நாடு முழுவதிலும் 444 எம்எல்ஏக்களை கட்சி வித்தியாசம் இன்றி வாங்குகிறீர்கள். பல அரசியல்வாதிகள், காண்ட்ரேக்டர்கள் பாஜகவில் இணைந்த உடன் சுத்தமானவர்களாகி விடுகிறார்கள்.

10 ஆண்டுகள் பிரதமராக நாட்டை ஆண்ட, 13. 5 ஆண்டுகள் முதல்வராக இருந்த ஒருவரால், ஊழல் என்றால் என்ன, நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது போன்ற மனிதர் நாட்டை ஆள நேர்ந்தது துரதிர்ஷ்டவசமானது என்று தான் நான் சொல்ல முடியும்.

பிரதமர் மோடி, சிறிய அரசியல் தலைவர் போல் நடந்து கொள்கிறார். 2019ம் ஆண்டு என்ன வாக்குறுதி அளித்தோம் என்பதையே கூட மறந்து விட்டார். இளைஞர்களுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் எனக் கூறியிருந்தார்.

என்ன மோடியின் கேரண்டி? மோடியின் கேரண்டி எல்லாம் தோல்வி அடைந்து விட்டது. ‘கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற மாட்டார்‘ என்பது மட்டும் தான் இப்போது மோடியின் கேரண்டி.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்