Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

"எனது வாழ்வின் நோக்கமே அதுதான்; ஜாதி வாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது" ; ராகுல் உத்தரவாதம்

CHENDUR PANDIAN.K24-04-2024
"எனது வாழ்வின் நோக்கமே அதுதான்; ஜாதி வாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும்  தடுத்து நிறுத்த முடியாது" ; ராகுல் உத்தரவாதம்

புதுடெல்லி

ஜாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இது எனது அரசியல் அல்ல எனது வாழ்வின் நோக்கமே இதுதான் என்றும், அது நாட்டு மக்களுக்கு தான் வழங்கும் உத்தரவாதம் என்றும் ராகுல் காந்தி அறிவித்து இருக்கிறார்.

இன்று டெல்லியில் நடைபெற்ற சமூக நீதி தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி இது தொடர்பாக மேலும் கூறியதாவது:-

"தங்களை தேசபக்தர் என்று செல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி ஜாதிவாரிக் கணக்கெடுப்பைக் கண்டு பயப்படுகிறார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே எனது உத்தரவாதம் (கேரண்டி) ஆகும். என்னை பொருத்தவரை ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது அரசியல் அல்ல; என் வாழ்வின் நோக்கமே அதுதான்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 70 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு எடுக்கப் போகும் முக்கிய நடவடிக்கையாக ஜாதி வார கணக்கெடுப்பு அமையும்.

இதன் மூலம் நாட்டின் தற்போதைய நிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொண்டு அடுத்து எந்த திசையில் நாம் பயணிக்க வேண்டும் என்பதை மதிப்பீடு செய்ய முடியும் எனவே ஜாதி வாரி கணக்கெடுப்பை நாங்கள் உறுதியாக அமல்படுத்துவோம்.

ராகுல் காந்தியிடம் "சீரியஸ்னஸ்" இல்லை என்றும் அரசியலில் ஆர்வம் இல்லை என்றும் ஊடகங்களும் எதிர் தரப்பினரும் சொல்கிறார்கள்.

நிலம் கையகப்படுத்தும் அசோதா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகியவை எல்லாம் முக்கியத்துவம் இல்லாத நடவடிக்கைகள்? உங்கள் கைகளில் ஒலிபெருக்கி இல்லாவிட்டால் நீங்கள் என்ன பேசினாலும் அது சீரியஸ்னஸ் இல்லாததுதான்.

எங்கள் திட்டங்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு தீவிரமானதாக தெரியவில்லை ஆனால் அமிதாப்பச்சன் ஐஸ்வர்யா ராய் விராட் கோலி ஆகியோர் அவர்களுக்கு தீவிரமான தலைப்புகளாக அமைகின்றன.

"அந்த பயம் இருக்கட்டும்"

நீங்கள் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை விரும்புகிறீர்களா? அப்படி என்றால் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பிரதமர் மோடியை உலுக்கிவிட்டது. அதைப் பார்த்து பிரதமர் பயமும் பதற்றமும் அடைந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏனென்றால் அது புரட்சிகரமான தேர்தல் அறிக்கை.

மேலும், பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக வழங்கப்பட்ட ரூ.16 லட்சம் கோடியில் 90 சதவீத இந்தியர்களுக்கு ஒரு சிறு பகுதியை திரும்ப வழங்குவதும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் நோக்கமாகும்".

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்