Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளித்த பரூக் அப்துல்லா: "வெறுப்பை தூண்டி நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்"

CHENDUR PANDIAN.K26-04-2024
பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளித்த பரூக் அப்துல்லா: "வெறுப்பை தூண்டி நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்"

ஸ்ரீநகர்

பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்டி நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக, பரூக் அப்துல்லா ஆவேசமாக கூறினார்.

காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா, ஸ்ரீநகரில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"தேர்தல் ஆணையத்தை சுதந்திரமான ஒரு அமைப்பாக மாற்ற வேண்டும். வேறு எங்கும் நீதி கிடைக்காவிட்டாலும் மக்களுக்கு நீதி கிடைக்கும் இடமாக நீதித்துறையும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். மாநில கவர்னர்களாக நியமிக்கப்படுபவர்கள் மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டுமே தவிர டெல்லிக்கு சேவை செய்வதற்காக அவர்களை நியமிக்க கூடாது.

பல அரசு நிறுவனங்களில் திறமையற்றவர்கள் நிர்வாகிகள் ஆக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த நிறுவனங்களை நாம் காப்பாற்ற வேண்டும். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும். இதன் மூலம் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

ராஜஸ்தானில் பிரதமர் கூறியதை நீங்கள் பார்த்தீர்கள். இந்திய அரசியலமைப்பை அவர் துண்டாட முயன்றார். இந்திய அரசியலமைப்பு அனைவருக்கும் கண்ணியத்தை வழங்குகிறது. ஒரு நாட்டின் பிரதமராக இருப்பவர் அனைவருக்காகவும் பேச வேண்டும்... அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

அவர் ஒரு குடும்பத்தின் தந்தை போன்றவர். மதம் அல்லது உணவு பழக்கம் அல்லது மொழி அடிப்படையில் அவர் மக்களை வேறுபடுத்தி பார்க்க கூடாது. தனது கட்சி சேர்ந்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் சேவை செய்பவர்தான் பிரதமர். நாட்டை துண்டாடவும் மக்களை மத அடிப்படையில் பிரிக்கவும் மோடி விரும்புகிறார்.

அவருடைய முயற்சிகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி போராளி வருகிறது பாஜக ஆட்சியின் போது செய்த தவறுகளை எதிர்க்கட்சி கூட்டணி நிச்சயமாக அகற்றும்".

இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், ராமபிரானின் உலகளாவிய முக்கியத்துவத்தை வலியுறுத்தி "ராமர் இந்துக்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் சொந்தமானவர்" என்று கூறினார்.

" உண்மையான முஸ்லிம் இந்து பெண்ணின் மங்கள சூத்திரத்தை (தாலி) பறிக்க மாட்டார்" என்றும் பரூக் அப்துல்லா பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்தார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்