Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

2-ம் கட்டத் தேர்தல் தொடங்கியது: சூடு பிடிக்கும் பிரதமர் மோடி, ராகுல் பிரசாரம்

CHENDUR PANDIAN.K26-04-2024
2-ம் கட்டத் தேர்தல் தொடங்கியது: சூடு பிடிக்கும் பிரதமர் மோடி, ராகுல் பிரசாரம்

புதுடெல்லி

நாடாளுமன்ற மக்களவையின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது.

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ளது 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததை தொடர்ந்து இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட தலைவர்கள் மக்கள் தவறாமல் வாக்களிக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராகுல் காந்தி இது குறித்த தனது வலைதள பதிவில், " மத்தியில் அமைய இருக்கும் அடுத்த ஆட்சி கோடீஸ்வரர்களின் ஆட்சியா? அல்லது 140 கோடி மக்களின் ஆட்சிய என்பதை தீர்மானிப்பது உங்களுடைய வாக்கு தான்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

" எனவே இன்று வீடுகளை விட்டு வெளியேறி அரசியலமைப்புச் சட்டத்தின் சிப்பாய்களாக மாறி ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்களிப்பது ஒவ்வொரு குடிமக்களின் கடமை" என்றும் ராகுல் அதில் மேலும் தெரிவித்து இருக்கிறார்.

இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், "பெண்கள் குறிப்பாக இளம் வாக்காளர்கள் அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவில் சாதனை படைக்கும் விதத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். அதிக அளவு வாக்குப்பதிவு நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது. உங்கள் வாக்கு.. உங்கள் குரல் "என்று பதிவிட்டு இருக்கிறார்.

சூடு பிடிக்கும் பிரசாரம்

முதல் கட்ட தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மோடியும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தியும் வகுப்புவாத பிரச்சினைகளை முன் வைத்து காரசார பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால், இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் முந்தைய தேர்தல் விட சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

"அரசியலமைப்பு சட்டத்தின் பெயரில் கூச்சல் போடும் காங்கிரஸ் இப்போது அதன் மறைக்கப்பட்ட நடவடிக்கைகளை மிக மோசமாக அம்பலப்படுத்தி இருப்பதாக" பிரதமர் மோடி நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள காங்கிரஸ், "வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் கிராமப்புற துயரங்கள், அத்துடன் தோல்வி பயம் போன்ற உண்மையான பிரச்சினைகளிலிருந்து வாக்காளர்களை பிரதமர் மோடி திசை திருப்புகிறார்" என்று பதிலடி கொடுத்திருந்தது.

முன்னதாக ராகுல் காந்தி தனது வீடியோவில், "நாங்கள் உங்களுடன் பேசினோம். உங்கள் மனதில் உள்ளதை கேட்டு ஒரு புரட்சிகர அறிக்கையை உருவாக்கினோம். இது காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்பட்டது என்றாலும் இது உங்கள் குரல் தான்" என்று தேர்தல் அறிக்கை பற்றி குறிப்பிட்டு இருந்தார்.

இன்று தேர்தலை சந்திக்கும் முக்கிய தலைவர்களில் ராகுலும் ஒருவர். அவர் கேரளாவின் வயநாட்டில் இருந்து மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னி ராஜா மற்றும் பாஜகவின் கே சுரேந்திரன் உட்பட பலர் களத்தில் உள்ளனர்‌.

கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராகுல் காந்தி நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை தோற்கடித்தார். இது கேரளாவின் அதிக வாக்கு வித்தியாசமாக அப்போது இருந்தது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்