Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

மக்களவைத் தேர்தல்; மதவாதம், வெறுப்புணர்வற்ற இந்தியாவுக்காக போராடுகிறேன் – எம்பி சசிதரூர் பேச்சு

26-04-2024
மக்களவைத் தேர்தல்; மதவாதம், வெறுப்புணர்வற்ற  இந்தியாவுக்காக போராடுகிறேன் – எம்பி சசிதரூர் பேச்சு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றியது என்றும் மதவாதம், வெறுப்புணர்வற்ற இந்தியாவுக்காக தான் போராடிக் கொண்டு இருப்பதாக காங்கிரஸ் எம்பியும் திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளருமான சசிதரூர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நாடு முழுவதும் 88 தொகுதிகளுக்கு நடக்கிறது. இதில் கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதரூர் போட்டியிடுகிறார். கடந்த 2009ம் ஆண்டு முதன் முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தரூர், 2014 மற்றும் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களிலும் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார். இந்த முறையும் வெற்றிபெறுவார் என்ற கணிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் நின்று தரூர் வாக்களித்ததுள்ளார். இது தொடர்பான படங்களையும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது –

மதவாதம் இல்லாத, கசப்புணர்வு அற்ற, வெறுப்புணர்வு அற்ற மற்றும் கடுமையான அவமதிக்கும் சொற்கள் இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்கத்தான் நான் போராடிக் கொண்டு இருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளில் இவை அதிகரித்துக் காணப்படுகிறது.

ஒரு காங்கிரஸ் வேட்பாளராக, எனக்கு தெரிந்து வாய்ப்பு கிடைத்த அனைத்து இடங்களிலும், இந்த தேர்தல் எனது எதிர்காலத்தை விட முக்கியமானது என்பதை குறிப்பிட்டு வருகிறேன். இது இந்தியாவின் எதிர்காலத்தை பற்றியது. டெல்லியில் உள்ள அரசை மாற்றுவது பற்றியது. அதைத் செய்யத்தான் நாம் இங்கு வந்து இருக்கிறோம்.

ஜனநாயகத்தை மீட்டெடுக்க, வேற்றுமையின் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த, இந்தியாவின் பன்மைத்தன்மையை மீட்க, நாம் வளர்ந்த அந்த இந்தியாவை மீட்டெடுக்க நாம் அனைவரும் வந்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் இவை அனைத்தும் திசைமாறி விட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்