Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

Patanjali :உச்ச நீதிமன்றம் ‘டோஸ்’: ‘பெரிதாக மன்னிப்பு’ கேட்ட பதஞ்சலி நிறுவனம்

PRITHIVIRAJ24-04-2024
Patanjali :உச்ச நீதிமன்றம் ‘டோஸ்’: ‘பெரிதாக மன்னிப்பு’ கேட்ட பதஞ்சலி நிறுவனம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடி, டோஸ்விட்டதைத் தொடர்ந்து பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் நாளேடுகளி்ல் இன்று மிகப்பெரிய அளவில் மன்னிப்புக் கோரி விளம்பரம் செய்துள்ளது.

பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் தயாரிக்கும் பொருட்கள் குறித்த தவறான கருத்துக்களைக் கொண்ட விளம்பரத்தை வெளியிட்டுவிட்டோம் என்று கூறி பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் பாலகிருஷ்ண ஆச்சார்யா, பாபா ராம்தேவ் ஆகியோர் மன்னிப்புக் கோரியுள்ளனர்.

பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர்களான ஆச்சார்யா பாலகிருஷ்ணன், யோகா குரு பாபா ராம் தேவ் இருவரும் தங்கள் நிறுவனம் தயாரிக்கும் ஆயுர்வேதப் பொருட்கள் குறித்து தவறான கருத்துக்களைத் தாங்கும், பொய்யான வாக்குறுதிகள் அளிக்கும் விளம்பரங்களை வெளியிட்டனர்.

750x450_406951-supreme-court-of-india-sc.jpg

அது மட்டுமல்லாமல் அலோபதி மருத்துவம், மருந்துகள் குறித்து அவதூறாகப் பேசினர்.

இவர்களின் பேச்சு குறித்து இந்திய மருத்துவஅமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணன் மீதுவழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனம் தங்களின் தயாரி்ப்பு குறித்த எந்தவிதான விளம்பரங்களையும் வெளியிடத் தடைவிதித்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்த தடையையும் மீறி, பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேதப் பொருட்கள் தொடர்பாக விளம்பரம் செய்தது.

இதையடுத்து, பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா இருவருக்கு எதிராக நீதிமன்றஅவமதிப்புவழக்கை இந்திய மருத்துவக் கழகம் தொடர்ந்தது. இந்த வழக்கில் பாபா ராம் தேவ், பாலகிருஷ்ணா இருவரும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகி வருகிறார்கள்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தங்கள் தவறுக்கு வெளிப்படையாக மன்னிப்புக் கோரியும், மன்னிப்புக் கடிதத்தையும் நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா வழங்கினர்.

baba randev apology.PNG

ஆனால், இருவரின் மன்னிப்பையும் ஏற்க நீதிபதிகள் மறுத்து, நீதிமன்ற அவமதிப்பு தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தனர்.

பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் குறித்து கூறி அனைத்து ஊடகங்களிலும் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்பதாக ராம்தேவ், பாலகிருஷ்ணா இருவரும் தெரிவித்தனர். இது தொடர்பாக ஏற்கெனவே இவர்கள் வெளியிட்ட விளம்பரம் மிகச்சிறியதாகவும், பூதக்கண்ணாடி வைத்து தேட வேண்டும் என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, யோகா குரு பாபா ராம்தேவ், உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா இருவரும், இன்று முன்னணி ஆங்கில நாளேடுகளில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளனர்.

“நிபந்தனையற்ற மன்னிப்பு” என்ற தலைப்பிட்டு மன்னிப்புக் கோரப்பட்டுள்ளது. அதில் “ உச்ச நீதிமன்றத்தின் நடந்துவரும் வழக்கில் உத்தரவுகளை நாங்கள் ஏற்காததால் எங்களின் சார்பிலும், பதஞ்சலி நிறுவநத்தின் சார்பிலும், நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறோம்.

22-11-2023 தேதியில் நாங்கள், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறோம். எங்கள் செய்த விளம்பரத்தில் உள்ள தவறுக்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம், இனிமேல் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காது என்பதில் கவனமாக இருப்போம்.

pathanjali.PNG

நீதிமன்றத்தின் வழிகாட்டலின்படி, மிகுந்த கவனத்துடனும், நேர்மையுடனும் இருப்போம். நீதிமன்றத்தின் மாண்பை நிலைநிறுத்தவும், நீதிமன்றம் அல்லது அதிகாரிகளின் உத்தரவுகள், சட்டவிதிகள், வழிகாட்டுதல்களுக்கு இணங்கி செயல்படுவோம் என நாங்கள் உறுதியளிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் நேற்று பதஞ்சலி நிறுவனத்தின் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் முகுல் ரோகத்கி “பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா இருவரும் மக்களை விளம்பரங்கள் மூலம் தவறாக வழிநடத்தியதற்காக 67 நாளேடுகளில் மன்னிப்புக் கோரி விளம்பரம் செய்தனர். இதற்காக 10 லட்சங்களுக்கு மேல் செலவிட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்

இதைக் கேட்ட நீதிபதி ஹிமா கோலி “ ஆனால், உங்கள் மனுதாரர் வெளியிட்ட மன்னிப்பு விளம்பரம், உங்கள் பொருட்கள் குறித்து நாளேடுகளில் வெளியிடும் விளம்பரம் அளவுக்கு பெரிதாக இருந்ததா. முதல் பக்கத்தில் விளம்பரம் செய்ய உங்களுக்கு சில பத்துலட்சங்கள் செலவாகவில்லையா. நீங்கள் நாளேடுகளில் வெளிட்ட மன்னிப்பு விளம்பரத்தை நாங்கள் பார்க்கவில்லை.

நீங்கள் விளம்பரம் செய்த உண்மையான நாளேட்டின் நகல் தேவை. எந்த பக்கத்தில் நீங்கள் விளம்பரம் செய்தீர்கள், எப்போது பிரசுரமானது, அதற்கான விலை என்ன, எத்தனை அளவு ஆகியவை குறித்து நாங்கள் காண வேண்டும். உங்கள் விளம்பரத்தின் உண்மையான நகலை எங்களுக்கு வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யுங்கள்” என உத்தரவிட்டனர்.

இதையடுத்து, பதஞ்சலி நிறுவனம் சார்பில் பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா ஆகியோர் இன்று நாளேடுகளில் பெரிய அளவில் மன்னிப்பு கோரி விளம்பரம் செய்துள்ளனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்