Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

மத்திய உள்துறை அமைச்சர் அமி்த் ஷா காந்திநகர் தொகுதியில் ‘விஜய முகூர்த்தத்தில்’ வேட்புமனுத் தாக்கல்

PRITHIVIRAJ19-04-2024
மத்திய உள்துறை அமைச்சர் அமி்த் ஷா காந்திநகர் தொகுதியில் ‘விஜய முகூர்த்தத்தில்’ வேட்புமனுத் தாக்கல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். கடந்த 2019ம் ஆண்டு இதே காந்திநகர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமித் ஷா, இப்போது மீண்டும் இதே தொகுதியலி் போட்டியிடுகிறார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா வேட்புமனுத் தாக்கலின்போது, மாநில முதல்வர் பூபேந்திர படேல் உடன் இருந்தார். காந்திநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், அமித் ஷா பிற்பகல் சரியாக 12.39 மணிக்கு விஜய முகூர்த்தத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

காந்திநகர் தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அமித் ஷா 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்.

காந்திநகர் தொகுதியில் நீண்டகாலமாகவே பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது, இந்தத் தொகுதியில் முன்னாள் துணைப்பிரதமர் எல்.கே.அத்வானி 2019 வரை எம்.பியாக இருந்தார். அமித் ஷா போட்டியிடுவடுவதையடுத்துஅதை அத்வானி விட்டுக்கொடுத்தார்.

வேட்புமனுத் தாக்கல் முடிந்தபின் மத்திய அமைச்சர் அமித் ஷா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ காந்திநகர் தொகுதியில் என்னுடைய வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தேன். எல்கே. அத்வானி, அடல்பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் போட்டியிட்ட தொகுதியில், மோடி வாக்காளராக இருக்கும் தொகுதியில் நான் முதல்முறை வெற்றி பெற்று, 2வதுமுறையாக போட்டியிடுவது பெருமையாக இருக்கிறது.

இந்த தொகுதி மக்கள் என் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளனர். நான் சிறுவயதில் இங்கு பூத் பணியாளக இருந்துள்ளேன், இப்போது எம்.பியாக இருக்கிறேன். இந்தத் தொகுதியில் ரூ.22 ஆயிரம் கோடிக்கு மேம்பாட்டுப் பணிகளை கடந்த 5 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத் தேர்தல் 102 தொகுதிகளுக்கு இன்று நடந்து வருகிறது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜூன் 1ம் தேதிவரை தேர்தல் நடக்கிறது, ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்