Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

‘பதஞ்சலி முதல்பக்க விளம்பரம்போல் உங்களின் மன்னிப்பும் பெரிதாக, விலை உயர்வாக இருந்ததா?’ பாரா ராம்தேவிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

PRITHIVIRAJ23-04-2024
‘பதஞ்சலி முதல்பக்க விளம்பரம்போல் உங்களின் மன்னிப்பும் பெரிதாக, விலை உயர்வாக இருந்ததா?’ பாரா ராம்தேவிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

உங்கள் நிறுவனத்தின் ஆயுர்வேதப் பொருட்கள் பற்றிய முதல் பக்க விளம்பரம் போல் நீங்கள் மக்களிடம் கேட்ட மன்னிப்பும் இருந்ததா, அதிகமான செலவாகியதா என்று யோகா குரு பாபா ராம்தேவிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர்களான ஆச்சார்யா பாலகிருஷ்ணன், யோகா குரு பாபா ராம் தேவ் இருவரும் தங்கள் நிறுவனம் தயாரிக்கும் ஆயுர்வேதப் பொருட்கள் குறித்து தவறான கருத்துக்களைத் தாங்கும், பொய்யான வாக்குறுதிகள் அளிக்கும் விளம்பரங்களை வெளியிட்டனர். அது மட்டுமல்லாமல் அலோபதி மருத்துவம், மருந்துகள் குறித்து அவதூறாகப் பேசினர்.

ramdevaid.jpg

இவர்களின் பேச்சு குறித்து இந்திய மருத்துவஅமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணன் மீதுவழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனம் தங்களின் தயாரி்ப்பு குறித்த எந்தவிதான விளம்பரங்களையும் வெளியிடத் தடைவிதித்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்த தடையையும் மீறி, பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேதப் பொருட்கள் தொடர்பாக விளம்பரம் செய்தது.

இதையடுத்து, பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா இருவருக்கு எதிராக நீதிமன்றஅவமதிப்புவழக்கை இந்திய மருத்துவக் கழகம் தொடர்ந்தது. இந்த வழக்கில் பாபா ராம் தேவ், பாலகிருஷ்ணா இருவரும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகி வருகிறார்கள்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தங்கள் தவறுக்கு வெளிப்படையாக மன்னிப்புக் கோரியும், மன்னிப்புக் கடிதத்தையும் நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா வழங்கினர்.

ஆனால், இருவரின் மன்னிப்பையும் ஏற்க நீதிபதிகள் மறுத்து, நீதிமன்ற அவமதிப்பு தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தனர்.

அனைத்து ஊடகங்களிலும் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் குறித்து கூறி வெளிப்படையாக மன்னிப்புக் கேட்பதாக ராம்தேவ், பாலகிருஷ்ணா இருவரும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பாபா ராம்தேவ் தரப்பில் மூத்தவழக்கறிஞர் முகல் ரோஹத்கி ஆஜராகினார்.

1616066711_supreme-court-4.avif

உச்ச நீதிபதிகளிடம் முகல் ரோஹத்கி கூறுகையில் “ பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா இருவரும் மக்களை விளம்பரங்கள் மூலம் தவறாக வழிநடத்தியதற்காக 67 நாளேடுகளில் மன்னிப்புக் கோரி விளம்பரம் செய்தனர். இதற்காக 10 லட்சங்களுக்கு மேல் செலவிட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்

இதைக் கேட்ட நீதிபதிகள் ஹிமா கோலி “ ஆனால், உங்கள் மனுதாரர் வெளியிட்ட மன்னிப்பு விளம்பரம், நீங்கள் உங்கள் பொருட்கள் குறித்து நாளேடுகளில் வெளியிடும் விளம்பரம் அளவுக்கு பெரிதாக இருக்குமா. முதல் பக்கத்தில் விளம்பரம் செய்ய உங்களுக்கு சில பத்துலட்சங்கள் செலவாகவில்லையா. நீங்கள் நாளேடுகளில் வெளிட்ட மன்னிப்பு விளம்பரத்தை நாங்கள் பார்க்கவில்லை.

நீங்கள் விளம்பரம் செய்த உண்மையான நாளேட்டின் நகல் தேவை. எந்த பக்கத்தில் நீங்கள் விளம்பரம் செய்தீர்கள், எப்போது பிரசுரமானது, அதற்கான விலை என்ன, எத்தனை அளவு ஆகியவை குறித்து நாங்கள் காண வேண்டும். உங்கள் விளம்பரத்தின் உண்மையான நகலை எங்களுக்கு வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யுங்கள்” என உத்தரவிட்டனர்.

அது மட்டுமல்லாமல் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதில் “ மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதி 1945ன் கீழ் ஆட்சபனைக்குரிய விளம்பரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்காமல் 170-வது விதியைப் புறக்கணித்தீர்கள்.

உங்கள் துறையின் அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியில் சர்ச்சைக்குரிய விளம்பரங்கள் தொடர்பாக நுகர்வோர்களைப் பாதுக்காக நடவடிக்கை எடுப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் நீங்கள் 170 விதியை நீக்கப்பார்க்கிறீர்கள். உங்களைச் செய்யத்தூண்டியது எது

இதுபோன்ற விளம்பரங்கள் மக்களை ஆள்கின்றன, குறிப்பாக குடும்பங்களையும் அவர்களின் உடல்நலத்தையும் பாதிக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியத்திற்கும் கூட கேடுவிளைவிக்கிறது. இந்த வழியில் எஃப்எம்சிஜி நிறுவனங்கள் அதிகம் இருக்கின்றன.

ramdev.jpg

இதுபோன்ற எப்எம்சிஜி நிறுவனங்களை அடையாளம் கண்டீர்களா. குழந்தைகளுக்கான பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் திசைதிருப்பும் வகையில் இருக்கிறதா என்பதை கவனித்தீர்களா. அவ்வாறு விளம்பரங்கள் இருந்தால், அவை மத்திய அரசால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்திய விளம்பரத் தரக் கவுன்சில் 948 ஆட்பனைக்குரிய விளம்பரங்களை அடையாளம் கண்டு பட்டியலிட்டுள்ளது. இந்த விளம்பரங்கள் குறித்து இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.

இந்த வழக்கில் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகங்களையும் இணைத்துக் கொள்ள நீதிமன்றம் விரும்புகிறது. இந்த வழக்கை மே 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் அதிகாரிகள் எந்த அடிப்படையில் மருந்துத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குகிறார்கள் என்பது தெரியவேண்டும்.

மருந்து நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு மருத்துவர்களும் விலை உயர்ந்த மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார்கள் என வழக்கைத் தொடர்ந்த இந்திய மருத்துவ அமைப்பையும் உச்ச நீதிமன்றம் சாடியது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்